பிரபல நடிகர்சிவகார்த்திகேயன். “ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்” என ஊரெல்லாம் மைக் வச்சு கூவுறாங்களே.. நாமும் கடமையை ஆற்றிட்டு வந்திரலாம்னு மனைவி கிருத்திகாவுடன் வளசரவாக்கம் குட் செப்பர்டு பள்ளிக்கு தன்னோட ஓட்டர் ஐ.டி யை எடுத்துக்கிட்டுப் போனார். அந்த ஐடி அரசாங்கமே கொடுத்தது என்பதை ஞாபகத்தில வச்சுக்குங்க மக்களே.!
“சார் லிஸ்ட்ல உங்க பேர் இல்ல.!”-என்கிறார் அந்த பூத் அதிகாரி.
“அப்ப தேர்தல் ஆணையம் கொடுத்த இந்த அடையாள அட்டைக்கு என்ன மதிப்பு?”
இப்படியாக தொடர்ந்து நடந்த வாக்கு வாதத்துக்குப் பிறகு ஓட்டுப் போட சிவகார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதேமாதிரி சாலிகிராமம் காவிரி பள்ளியில் ரமேஷ்கண்ணாவுக்கும் ஓட்டு உரிமை இல்லை. அவரும் நல்லா திட்டிட்டு போயிட்டார்.ரோபோ சங்கருக்கும் இல்லியாம். அப்ப இவங்கல்லாம் வயது வந்த இந்திய குடிமக்கள் இல்லியா?
இப்படி இருந்தா எப்படிங்க ஜனநாயக கடமை ஆட்டுறது ?