அரசியலில் சொல்லடியும் கல்லடியும் சகஜமப்பா.! இதையும் தாண்டி ஷூ வீச்சு என்றால் அது வீரியம் உள்ளதாகத்தான் இருக்க முடியும்.
புதுடில்லியில் இருக்கிற பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ்.ஆந்திராவை சேர்ந்தவர்.
என்ன சொல்லித் தொலைஞ்சாரோ தெரியல, பத்திரிகையாளர் வரிசையில் இருந்து ஆத்திரமுடன் ஒருவர் தனது ஷூவை கழற்றி ஏவுகணையாக்கி வீசி விட்டார்.
அவரை அப்படியே அமுக்கிக்கொண்டுபோய் விட்டார்கள். காரணம் இன்னமும் தெரியல.