நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதற்காக சென்றார். ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் உள்ள வாக்காளர்பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவின் பெயர் மட்டுமே இடம் பெற்று இருந்தது.சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவ கார்த்திகேயன் அவர்களிடம் தன்னிடம் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவ காரம் ,மேலதிகாரிகள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வழியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.சிவகார்த்திகேயனும் தனது ஜனநாயக கடமையை வெற்றிகரமாக முடித்து விட்ட சந்தோசத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.