முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடந்தது.. இவ் விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிபேரரசு வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுவாக ரஜினிகாந்த பேசும் மேடைகளில் ஏதாவது ஒரு விஷயம் பரபரப்பாகி விடும் அது இந்த விழா மேடையிலும் நடந்தது. இவ் விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. அரசியல்வாதிகள் கெட்டுப்போனால் நாடு உருப்படும், மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும், ஆனால் நீதிமன்றம் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது. நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில், முதல் தபால் தலையை பெறுவதற்கு, அவருடைய குடும்பத்தில் அதிகம் நெருக்கமானவன் என்ற தகுதியை விட எனக்கு வேறு தகுதி இல்லை. அவருடைய மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மிகத்தில் பெரும் புலமை பெற்றவர். அவரிடம் எப்படி இதனை பெற்றீர்கள்? என்று ஒரு முறை கேட்டதற்கு, எனக்கு குரு என்னுடைய கணவர் கைலாசம் தான் என்றார். இவரே இவ்வளவு புலமை பெற்றிருக்கும் போது நீதிபதி எவ்வளவு புலமை பெற்றிருப்பார் என்று எண்ணி பார்த்து வியந்து போனேன். பொதுவாக ஞானம் என்ற நிலையை அடையும்போது நான், நீ, நாம், நாங்கள் என்ற வார்த்தைகள் அழிந்துவிடும். எனவே ஆன்மிக வழியில் நாம் ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்’ இவாறு அவர் பேசினார்.