நடிகை ரகுல்பிரீத் சிங்கை அறியாத புரியாத ரசிகர்களே இல்லை.
அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் முக்கிய நாயகர்களுடன் நடித்திருக்கிறார்..இதைப் போலவே ஆந்திராவிலும்.!
தற்போது நாகார்ஜுனாவுடன் நடித்து வருகிறார் மன்மதுடு 2..
முதல் செட்யூல்டு முடிந்து ரஷ் பார்த்திருக்கிறார். கொழுக் மொழுக்கென இருந்த ரகுல் பிரீத் பல காட்சிகளில் மெலிந்து காணப்பட்டிருக்கிறார். காரணம் அவர் ஜிம் பறவையாகி இருக்கிறார். இதனால் உடம்பு மெலிந்து காணப்பட்டிருக்கிறது.
நாகார்ஜுனாவுக்கு சரிப்பட்டு வராது என தோன்றி இருக்கிறது.
உடனே ரகுல் பிரீத்துக்கு மெமோ.
“உனது தோற்றம் குண்டாக இருக்க வேண்டும் மெலிந்து காணப்படுவது நல்லா இல்லை.நீ குண்டாகு “என மெமோ அனுப்பி இருக்கிறார்.
அடப்பாவமே ! கொம்பு ஸ்டிராங்காக இருந்தும் மாடு இளைச்ச கதையாகிப்போச்சே!