தரம் தாழ்த்திப் பேசுவதற்கென்றே அரசியல் கட்சிகள் சிலரை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
இதற்கு எந்த கட்சியும் விதி விலக்கு இல்லை.!
அந்த தரம் தாழ்ந்த பேச்சை கேட்பதற்கு மகாஜனங்களும் பெருமளவில் கூடி ரசிப்பார்கள்
இதனால் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு தனி கிராக்கி உண்டு. தரம் கெட்ட பேச்சுகளை பேசுவதற்கு தற்போது பெரிய மனிதர்களே உதாரணமாகி இருக்கிறார்கள். அதை கட்சியும் ஆதரிக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.
பிரதமர் மோடி பிரசாரத்துக்கு கிளம்பும்போது தனியாக மேக்கப் போட்டுக்கொள்கிறார் என வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை கர்நாடக முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டு “கேமராவுக்கு வருவதற்கு முன்னர் தனியாக மேக் அப் போட்டுக் கொள்கிறார்..இதனால் முகம் பளிச்சென பிரகாசமாக இருக்கிறது”என்று பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ராசு காகே கடுமையாக குமாரசாமியை விமர்சித்தார்.அதை பாஜகவின் மேலிடம் தேஜஸ்வினி ரமேஷ் ஆதரித்திருக்கிறார் என்பதுதான் வேதனை.
ராசு காகே என்ன பேசினார்?
“குமாரசாமி! நீ 100 தடவை குளிச்சாலும் எருமை மாடு மாதிரிதான் இருப்பே!”
அடடா பாஜகவின் கண்ணியம் தெரிகிறதா?