நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு போடுவதற்காக சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
வாசலில் நின்ற பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
“அடுத்த ஓட்டு ரஜினிக்குத்தான் என்று உங்கள் ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்களே ,அது நிஜமாகுமா?” என பத்திரிகையாளர்கள் கேட்க சிரித்துக் கொண்டே
“அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் புரிகிறது. !நிச்சயமாக அவர்களை ஏமாற்றமாட்டேன்”என உறுதியான குரலில் சொன்னார்.
தமிழகத்தில் நல்ல முறையில் தேர்தல் நடந்துள்ளது. முந்தைய காலங்களை விட தற்போது அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால், எனது அரசியல் அறிவிப்பு வரும். மோடி பிரதமராவது மே 23-க்கு அடுத்து தெரியும்!-“என்றார் நடிகர் ரஜினிகாந்த் .