திருமணத்திற்கு பிறகும் மிகவும் பிஸியான நடிகையாகவே வலம் வரும் சமந்தா, தமிழில் விஜய்சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் எதிர்பார்த்த அளவு போகாததால் மிகவும் அப்செட்டாகி போனாராம்.
சமந்தா தெலுங்கில் தன கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து நடித்த ‘மஜிலி’ படமாவது வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதி கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டிக்கொண்டாராம்.
அந்த பிரார்த்தனை தற்போது பலித்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சியாம் சமந்தாவுக்கு. ஒரே வாரத்தில் ரூ.50 கோடி வரை இந்தப் படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதைவிட நாக சைதன்யாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்கிறது தெலுங்கு திரையுலகம்.
இந்நிலையில், மஜிலி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளாராம்.
தமிழில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சுமந்தாவே நடிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.