கல்கியின் சாகா வரம் பெற்ற படைப்புகளில் பொன்னியின் செல்வன் தனித்தன்மை வாய்ந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.முயன்றும் முடியாமல் போனது. அந்த பெருநாவலில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் அமரத்துவம் பெற்றவை.வந்தியத்தேவன்,குந்தவை,நந்தினி, குந்தவி நாச்சியார்,பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் என அத்தனை பேருமே உயிருடன் நடமாடும் உயரோவியங்கள்.
வந்தியத்தேவனாக கார்த்தி, இந்த கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்கலாம் என மணிரத்னம் நினைத்துப் பேசி இருக்கிறார்.ஆனால் அவரது கால்ஷீட் டைட்டாக இருப்பதால் கிடைக்காமல் போய் விட்டது.
அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்கள் எனத் தெரிகிறது. வந்தியத்தேவனாக வாளேந்தவிருப்பது, கார்த்தி.
‘குந்தவை’ வேடத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கப் பேசியுள்ளது படக்குழு. சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்கவைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.ஆதித்த கரிகாலனைப் பழிதீர்க்க வரும் நந்தினியே கதையின் வில்லி. சோழர்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் தன்னைவிட வயது முதிர்ந்த பெரிய பழுவேட்டரையரை மணந்துகொள்ளும் பேரழகி நந்தினி பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், பழூவூர் என்னும் சிற்றரசை ஆளும் பெரிய பழுவேட்டரையராக சத்யராஜ் நடிக்கலாம் என்கிறார்கள்..

பூங்குழலி கதாபாத்திரத்தில் நயன் நடிக்கிறார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனையால் நயன் விலகிவிட்டதாகவும்,அவருக்கு பதிலாக நடிகை அனுஷ்காவை மணிரத்னம் அணுகி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு பொன்னியின் செல்வன் என பெயர் வைப்பதை விட வந்தியத்தேவன் என பெயரிடுவதே சரியாக இருக்கும் என கருதுகிறார்கள். ஆழ்வார்க்கடியான் கேரக்டருக்குத்தான் சரியான ஆள் கிடைக்கவில்லை .தீவிர வைஷ்ணவர் .குள்ளம்.தொப்பை,குயுக்தி எல்லாம் அமைந்த கடுமையான கேரக்டர். கதையில் தீவிர சைவர்களுடன் வாதிடும் காட்சியெல்லாம் உயிரோட்டமானவை.