மதமும் ஜாதியும் மனிதர்களை எப்படியெல்லாம் கொல்கிறது அரசியல்வாதிகள் அதை எப்படியெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் பொன் பரப்பி.
உயர்ந்த ஜாதி ,தாழ்ந்த ஜாதி என்கிற அநாகரீகம் அப்பாவி மனிதர்களை வேட்டையாடி இருக்கிறது.
இதை இசைஞானி இளையராஜாவும்,உலகநாயகன் கமல்ஹாசனும் கண்டித்திருக்கிறார்கள். மருதநாயகம் படத்துக்காக இருவரும் சேர்ந்து எழுதிய பாடல் வரிகளை கமல் நினைவு படுத்தியிருக்கிறார்.
ஆங்கிலேயனை எதிர்த்துப் போராடிய மருதநாயகம் பற்றிய படத் தொடக்கவிழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தையே வரவழைத்தவர் கமல்.அந்த படம்தான் இங்கு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.