“அவன் என்னை கூப்பிட்டான்.” “வாய்ப்பு வேணும்னா என் கூட வந்து படுன்னு சொன்னான்”இப்படி ஆளாளுக்கு சொல்லிவரும் புகார்களுக்காக நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த மாதிரியான புகார்களை விசாரிப்பதற்காகவே நடிகர் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது.
அந்த குழுவில் நாசர் விஷால் கார்த்தி,பூச்சிமுருகன் குஷ்பு,ரோகிணி,சுகாசினி ஆகியோர் தவிர ஒரு சமூக ஆர்வலர்,வழக்குரைஞர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். பொதுவாக நடிகர் சங்கம் அமைக்கும் குழுக்களில் நடிகை லட்சுமி இடம் பெறுவதில்லை.இது என் என புரியவும் இல்லை.அவர் தீவிரவாதி என்பதினாலோ என்னவோ!
பகிரங்கமாக மீ டூ குற்றம் சாட்டிவிட்டு பின்னர் இந்த குழுவினரிடம் வந்து புகார் சொல்கிறவர்களை பற்றியும் விசாரணை செய்யுமா என்பது தெரியவில்லை.