நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றி மத்திய மாநில ரகசியப் போலீஸ் நிபுணர்கள் தத்தம் உயர் அதிகாரிகளுக்கு முன்னதாகவே அறிக்கைகள் அனுப்புவார்கள்.
தமிழகத்தில் நடந்துள்ள தேர்தலில் திமுக கூட்டணி இருபத்தியெட்டு தொகுதிகளை உறுதியாக கைப்பற்றும் என அந்த குழு கணித்திருக்கிறது. பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என சொல்லியிருக்கிறது.
மாநில உளவுத்துறை எட்டு சட்ட மன்றத் தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்பதாக கணித்திருக்கிறதாம்.
இந்த தேர்தலில் புதியவர்களின் வாக்குகள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்துக்கும் சீமானின் நாம் தமிழர் இயக்கத்துக்கும் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதம் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளை நிச்சயம் யோசிக்க வைக்கும் என்கிறார்கள்.