ஒரு வாரத்துக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
குண்டு வெடிப்புகள் ஆறு இடங்களில் நடந்திருக்கிறது. தேவாலயங்கள். மற்றும் ஹோட்டல்கள் ஆகிய இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 100 க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். ஆயிரம்பேர் வரை காயம் அடைந்திருக்கிறார்கள்.
கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமாரும் தங்கியிருந்தார். இவர் அடிக்கடி ஸ்ரீ லங்கா வருவது உண்டு. யார் செய்த புண்ணியமோ அந்த ஓட்டலை விட்டு வெளியேறிய சற்று நேரத்தில் அந்த ஹோட்டல் பயங்கரவாதிகளின் குண்டுக்கு இலக்கு ஆகி இருக்கிறது.
இத்தகைய பயங்கரம் நடக்கலாம் என்பதை முன் கூட்டிய ஸ்ரீ லங்க அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது .இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்ன காரணம் என்பது இனிமேல்தான் தெரியவேண்டும்.