“தமிழினம் மீளவும்
தமிழ்நாடு வாழவும்
தளபதி ஆளவும்
வாழ்த்துச் சொன்னேன்..”
வைரமுத்து வாழ்த்துச் சொன்னால்
முன்னதாகவே வாழ்த்துச் சொன்னால்
அதில் அர்த்தங்கள் ஆயிரம் !
கவிஞனின் வாழ்த்துப் பலிக்கும் என்பார்கள்.
இந்த கவிஞனோ யாவும் அறிந்தவர்.
அரசுகளின் அந்தரங்கம் கணிக்கும்
வித்தகர்களின் விலாசம் அறிந்தவர்.
ஒற்றுப்பிரிவின் உள்ளம் புரிந்தவர்.
முன்னதாகவே அவர்களின்
கணிப்பு கண்டுவிட்டாரோ!