கடந்த 19 ம் தேதி வெளியான காஞ்சனா.3 எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் ரசிகர்கள் வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக அந்த படத்துக்கு பாலாபிஷேகம் செய்து அவர்களின் அபிமானத்தைக் காட்டி இருக்கிறார்கள்.
இதில் ஒருவர் முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் லாரன்ஸ் மாஸ்டரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்திருக்கிறார்.படமே ரிஸ்க்கில் இருக்கும்போது இந்த ரசிகர் ரிஸ்க் எடுத்து தொங்கலாமா?
இதை மூடர் கூடம் இயக்குநர் நவீன் வன்மையாக கண்டித்திருக்கிறார்.
“இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளராது. இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது “@offl_Lawrence என பதிவிட்டிருக்கிறார்.