இலங்கையில் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலுக்கு அப்பாவி மனிதர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
எல்லோருமே துடிக்கிறார்கள். இந்தியா முழுமையும் பொங்குகிறது. மனிதாபிமானம். சகமனிதன் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதே உணர்வு தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது இல்லாமல் போனதேன்?
சரி கடந்துபோனதை நினைத்துக் கலங்குவதில் பொருள் இல்லை.
இன்றைய இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காஜல் அகர்வாலும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“சில நாட்களுக்கு முன் அங்கு தானிருந்தேன். எதற்காக இந்த வெறுப்பு?கோபம் வருகிறது!மரணித்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் ” என சொல்லியிருக்கிறார்