அவரே பாவம் தூத்துக்குடி என்ன பண்ணப்போவுதோ என்பது புரியாமல் தூக்கம் கேட்டுப் போயிருக்கிறார்.அவரைப் போயி இதுதான் வெற்றிகரமான தோல்வி என தமிழிசையின் படத்தின் மேல அச்சுப்பதிக்கலாமா?
சென்னை -பெங்களூரு அணியின் கிரிக்கெட் மோதலில் ‘தல’ தோனி திறமையாக ஆடியதை நாடே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது..சென்னை சி.எஸ்.கே அணி தோற்றாலும் தோனியின் திறமையைத்தான் பேசுகிறார்கள். தோல்வியைப் பற்றி கவலைப்படவில்லை.
இதை நம்ம கருத்து கஸ்தூரியும் பாராட்டி இருக்கிறார். சட்டசபை தேர்தலில் வடக்கே பாஜக தோல்வியுற்றதை வெற்றிகரமான தோல்வி என மஞ்சள் பூசி அழகுபார்த்த தமிழிசையை நையாண்டி செய்ய இதுதான் தக்க சமயம் என நினைத்து படம் போட்டு கலாய்த்திருக்கிறார்
“Talk about going down fighting. #dhoni forever. தோத்தா இப்படி பெருமைப்பட தோக்கணும்னுயா. #தல டா .”என கருத்திட்டவர் அதற்கான படமும் வெளியிட்டிருக்கிறார் ,அதுதான் தொடக்கத்தில் இருக்கிறது.