விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. இதில், விஷாலுடன் ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் உள்பட பலர் நடித்துள்ளனர்.சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது,
நிகழ்ச்சியில் குஷ்பூ பேசும் போது
“எனக்கு விஷாலை நீண்டநாட்களாகத் தெரியும். நடிக்க வரும் போதே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்தை என் கணவர் சுந்தர்.சி இயக்கும்போது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். நான் போனால் கூட யாரோ மாதிரி என்னைப் பார்க்கும் அளவுக்கு ;நெருக்கமான நண்பர்களாகி விட்டார்கள்… சுந்தர்.சி, விஷால் இடையில் நான் செல்ல விரும்பவில்லை. நான் போனால் அவர்கள் சுதந்திரம் கெட்டுவிடும் என்று படப்பிடிப்பு பார்க்கக் கூட நான் போகவில்லை.இந்த நட்பால் அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்கள். அதனால் இலகுவாக வேலைபார்க்க முடிந்தது.எல்லாப் படத்தைவிட ஹன்சிகா இந்தப்படத்தில் அழகாகத் தெரிகிறார். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வருகிறது.நிச்சயம் இது ஒரு பொங்கல் கொண்டாட்டம்தான். இப்போது சுந்தர்.சியின் மனைவி என்பதில் பெருமைப் படுகிறேன். “என்று கூறி வாழ்த்தினார். ஆர்யா பேசும் போது” விஷாலிடம் என்ன மச்சான் படம் எப்போ வெளியாகிறது என்றேன். பொங்கலுக்கு என்றார் .பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன்.எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது.”என்றார்.
இதையடுத்து விஷால் பேசியதாவது,
” முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த ‘மத கஜ ராஜா’ .படம் இன்னமும் வெளிவரவில்லை, மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று பலபேர் கேட்டார்கள். இருந்தாலும் நான் தெளிவாக இருந்தேன். இந்த ‘ஆம்பள’ லைன் முன்பே சொல்லப்பட்டதுதான் .சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம்நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப் படுத்துவது இது கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச்செய்வது நல்லதல்ல.ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு . ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு.இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்..சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன். “இவ்வாறு விஷால் பேசினார்.நிகழ்ச்சியில் நடிகர்கள் வைபவ் ரெட்டி, சதிஷ், நடிகை ஹன்சிகா, இயக்குநர்கள் சுசீந்திரன், திரு, தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், முருகராஜ், கே.ஈ ஞானவேல்ராஜா இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாஆகியோரும் பேசினார்கள்.