பொதுவா சினிமாவை பத்தி எழுதுனா படிக்கிறாங்க, ஆனா நடிகையை பத்தி கிசு கிசு எழுதுனா அதனோட ரேஞ்சே வேற. லைக்குகள் அள்ளும்.
இதை நடிகைகள் தெரிஞ்சி வச்சிருக்காங்க. நெருங்கிப் பழகுற பத்திரிக்கை நண்பர்களிடம் எழுத சொல்றாங்க. வேண்டாத நடிகைகளைப் பத்தியும் சொல்றாங்க. இது கோலிவுட்டிலும் நடக்கிது..
பிரபல நடிகை இஷாபதானியின் கவலையும் இதுதான்!
“கஷ்டப்பட்டு நடிக்கிறேன்.நல்லபேரு வாங்குறேன். ஆனா அதப்பத்தியெல்லாம் எழுதறதில்ல. என்னோட பெர்சனல் வாழ்க்கையைப் பத்திதான் அதிகமா எழுதுறாங்க.
தினமும் எழுதுறாங்க.! எப்படிய்யா டெய்லி உங்களால விதம் விதமா கற்பனை பண்ணி எழுத முடியிது?அப்படி எழுதுனாதான்உங்களுக்கு விற்பனையாகுது!
என் நடிப்பை பத்தி தப்பா எழுதுனாதான் என்னை பாதிக்கும். மத்தபடி இந்த கிசுகிசுக்களால் காயப்படுவேனே தவிர பெரிசா எடுத்துக்கிறதில்ல. நானும் டைகர் ஷராப்பும் எங்கே டின்னர் போனாலும் எங்களுக்கு முன்னாடி போட்டோகிராபர்ஸ் வந்துடுறாங்க.எப்படித்தான் எங்க புரோக்ராம் தெரியிதோ கடவுளே!”என்கிறார்