இயக்குநர் சற்குணத்தின் ‘களவாணி’ பட்டையை கிளப்பிய படம். அந்த படத்தில் விமல் .ஓவியா ஆகியோர் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்கி இருந்தார். விமல் ஓவியா,சரண்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
திரையிடத் தயாராக இருந்த களவாணி இரண்டாம் பாகத்தை திரையிடக்கூடாது என்று ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் தடை வாங்கி இருக்கிறது.
ஜூன் 10 ம் தேதி வரை தடை வாங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக இயக்குநர் சற்குணம் பேசுகையில் “தடை வாங்கியவரை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. இந்த தடை தொடர்பாக நான் தயாரிப்பாளரிடம் பேசியபோது “அது நடிகர் விமல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம்” என்று சொன்னார்.விமலுக்கும் அவர்களுக்கும் என்ன சிக்கல் என்பது எனக்குத் தெரியாது. நான் நீதியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.எனக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.