நடிகர் சங்கத் தேர்தல் குறித்து இன்று மாலை வடக்கு போக் ரோட்டில் உள்ள ஆர்.ஜே. ரெசிடன்சி ஓட்டலில் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராதாரவி, ராதிகா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சிலம்பரசன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் சிலம்பரசன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சரத்குமார் தலைமையிலான அணிதான் நடிகர்களுக்காக பாடுபடும் அணி. நடிகர் சங்க தேர்தலில் உண்மை தான் வெற்றி பெறும் என கூறினார்.இக்கூட்டத்தில்,நடிகர்கள் ராதாரவி,ராம்கி,நிரோஷா,ரமேஷ்கண்ணா,ஷாம்,எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ,கே.ராஜன்,டி.பி.கஜேந்திரன்,நடிகை மும்தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.