இயக்குநர் அட்லி எந்த நேரத்தில் ஸ்டார்ட் சொன்னாரோ தெரியவில்லை .வம்பும் வழக்கும் வரத்தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரு துணை நடிகை போலீசில் புகார் செய்திருந்தார்.
தளபதி விஜய்யின் படப்பிடிப்பு இன்று காலை வழக்கம் போல சென்னையை அடுத்து இ.வி.பி.படப்பிடிப்பு நிலையத்தில் தொடங்கியது.
கிரேனில் ஏறி 100 அடி உயரத்தில் லைட்ஸ்மேன் மின்சார விளக்கை கட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த விளக்கு தரையில் நின்று கொண்டிருந்த செல்வராஜ் (52) என்கிற எலக்ட்ரிசியன் தலை மீது விழுந்திருக்கிறது.கடுமையான காயம்.ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என முதலில் வந்த செய்தி தெரிவிக்கிறது.