தனுஷ் ரசிகர் மன்றத்தில் உள் விவகாரம் வெடித்திருக்கிறது. தலைமை நிர்வாகிகளால் பலர் ஓரம் கட்டுப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .தலைமை பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக புலம்பவும் செய்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி மன்றத்தினரைத் தவிர வேறு எந்த நடிகரின் ரசிகர்கள் வந்தாலும் அனுமதிக்க மாட்டார்களாம்.
இப்படியெல்லாம் கட்டுப்படுத்துவது நல்லதல்ல என்கிறார்கள். இதனால் தலைமையை எதிர்த்து ரசிகர்கள் சுவரொட்டிகள் ஓட்டிவருகிறார்கள்
நம்ம கருத்து கஸ்தூரி வீட்டுப்பக்கமும் ஒட்டி இருக்கிறார்கள்.தூரம் தொலைவில் இருந்தாலே மூக்கு வேர்க்கும் .பக்கத்து வீடு என்றால் கேட்கவா வேண்டும்?
“தனுஷ் கேம்ப்பில் எதோ நடக்குதே ! இது நல்லா இல்லையே !”என கமெண்ட் அடித்திருக்கிறார்.