தங்கச்சிய கண்டு பாலிவுட்டே பயந்து நடுங்கிதுங்க.
ஆ..ஊ…ன்னா தங்கச்சி வந்திடுரா…வாயைக் கொடுக்காதிங்கப்பா என்று பிரபலங்கள் ஒதுங்கிறாங்க.
வேற ஒண்ணுமில்ல. நடிகை கங்கனா ரனாவத்தின் ‘மெண்டல் க்யா ஹை’ என்கிற படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு.இந்த படம் ரங்கனாவின் படம்.
மன நலமற்றவர்களை இன்சல்ட் பண்ற மாதிரி டைட்டில் இருக்கு என சொல்லி சமூக நல சங்கங்கள் பிரபலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்குத்தான் கங்கனாவின் சகோதரி ரங்கோலி காட்டமாக பதில் சொல்லி இருக்கிறார்.
“அய்யா இந்திய சைக்கியாட்ரிக் சொசைட்டி அமைப்பினரே !
எங்க சகோதரி கங்கனா ஒரு பெண்ணியவாதி.மூணு தடவை தேசிய விருது வாங்கினவ.அவளின் மணிகர்ணிகா படத்தை இன்று பல மாநிலங்களில் பள்ளிக்கூடத்தில் திரையிடுறாங்க.இப்ப மெண்டல் கியா ஹை படத்தில் நாங்க என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை படம் வந்ததும் பார்த்து தெரிஞ்சிக்குங்க.
கர்ணி சேனாவை அனுப்பி கலாட்டா பண்ண வச்சிடாதீங்க” என்று ரங்கோலி கூறி இருக்கிறார்.