டி.ராஜேந்தர்- உஷா தம்பதியின் இரண்டாவது பிள்ளை குறளரசனுக்கும் நபீலா அகமதுக்கும் இன்று பிற்பகல் மணமகள் இல்லத்தில் இசுலாமிய முறைப்படி நிக்காஹ் நடக்கிறது.
தம்பியின் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணன் எஸ்.டி.ஆர்.இன்று பெங்களூரில் இருந்து சென்னை வருகிறார்.
மணப்பெண்ணை படம் எடுக்கக்கூடாது என்று குறளரசன் நிபந்தனை விதித்திருக்கிறார்.டி.ஆருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குக் கூட அழைப்பிதழ்கள் கொடுக்கப்படவில்லை என்பது சிறப்பு செய்தி.
மணமக்கள் வாழ்க என்று சினிமா முரசம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.