“அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே கனவான கதை கூற வா!பொங்கும் விழி நீரை அணை போடவா!”
கவியரசர் கண்ணதாசனின் வரிகள்.
காதல் கை கூடாமல் போன நிலையில் நம்ம ஸ்ருதிஹாசன் பாடுவதைப் போல் இல்லையா?
இல்லை.!
ஸ்ருதிக்கும் கண்ணீர் வரவில்லை.மைக்கேலுக்கும் இதயம் நொறுங்கவில்லை..பரஸ்பரம் சொல்லி வைத்ததைப் போல இருவருமே பிரிந்து விட்டார்கள்.
காதலெனும் மாளிகையில் கவி பாடித் திரிந்தவர்கள்தான் இருவரும்! அப்பா,அம்மா இருவருக்குமே மைக்கேலை ஸ்ருதி அறிமுகப் படுத்தியிருக்கிறார். மைக்கேலுக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு அழகுபடுத்தி பார்த்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
ஆனால் எல்லாமே கலைந்து போன ஓவியம் போலாகிவிட்டது.
“அதிர்ஷ்டமில்லை வாழ்க்கையில்! இருவரையுமே எதிரெதிர் பக்கங்களில் வைத்து விட்டது.இனி எங்கே சேருவது?
தனித் தனி பயணம்தான்!
ஆனால் எப்போதும் அந்த இளம் பெண்தான் சிறந்த துணையாக இருப்பாள்.நல்ல தோழியாய் அவள் கிடைத்தது எனது பாக்கியம்.” என கவிதை மாதிரி மைக்கேல் சொன்னால்….!
“எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேருகிறேன்” என சினிமாவைப் பற்றி சொல்லுகிறார்.ஸ்ருதிஹாசன்.பிரிவை இருவருமே உறுதி செய்திருக்கிறார்கள்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவரும் இணைந்திருந்த படங்களை எடுத்து விட்டார்.