இதற்காத்தானே ஆசைப்பட்டோம் என விஷாலின் எதிர்ப்பாளர்கள் வான்கோழி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாடா புகார் கொடுத்து எத்தன மாசம் சார் ஆச்சு…இப்பவாவது கலைச்சிங்களே என சிக்கன் பக்கோடாவைமெல்லுகிறார்கள்.
“நிதி மோசடி,கணக்கு வழக்கு சரியில்ல அக்கிரமம் நடக்கிறது” என்று சங்கத்தை பூட்டுகிற அளவுக்கு தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருந்த விஷால் மீது காட்டத்தில் இருந்தார்கள் பல தயாரிப்பாளர்கள்.
இந்த சங்கத்தில் படங்கள் எடுத்து பல்லாண்டுகள் ஆனவர்களுக்குத்தான் கோரைப்பல் கூர்மையாக இருக்கும். அவர்களை மட்டும் பகைத்துக் கொள்ளவே கூடாது என்பது பால பாடம்.அவர்கள் அடித்த ஆணியைத்தான் விஷால் அணியினால் பிடுங்கவே முடியவில்லை.
எடப்பாடி அரசுக்கும் விஷால் மேல் செம காட்டம். அரசை விமர்சிப்பது எந்த ஆளும் கட்சிக்கு பிடிக்கும்?
மாட்டுவார்கள் என காத்திருந்தார்கள். விஷால் எதிரணியினரின் மனு மீது விசாரணை !
உண்மைதான் மனுவில் சொன்னவை எல்லாமே! ஆகவே தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகக்குழுவை கலைத்து அரசின் அதிகாரி என்.சேகர் என்பவரை நியமித்திருக்கிறோம் என உத்திரவு போட்டிருக்கிறார்கள்.
விஷால் தரப்பினர் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை!