அடுப்பில் பொங்கிய பொங்கலை இறக்கி வைக்கிற நேரம் பார்த்து இடுப்பில் பிடிப்பு. “ஆத்தாடி” என கத்தியபடியே அவள் சுவரோரம் சாய்ந்து விட்ட கதையாகிப் போச்சு நாடோடிகள் 2 படக்குழுவுக்கு.!
நாடோடிகள் வெற்றிகரமாக ஓடிய படம் சமுத்திரக்கனி இயக்கியது.
நாடோடிகள் 2 எடுத்தால் என்ன என்கிற எண்ணம் சமுத்திரக்கனி சசிகுமாருக்கு வந்தது. ஒரு தயாரிப்பாளரும் வந்தார். ஆனால் படம் முடியும் வரை சசிகுமார் சமுத்திரக்கனி இருவருமேதான் பணம் போட்டு முடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு சைடில் பணம் செலவழிக்கவில்லை என்கிறார்கள்.
படம் முடிந்துவிட்டது.சூப்பராக வந்திருக்கிறதாம்.! ஆனால் படத்தை திரையிட முடியவில்லை.தயாரிப்பு சைடில் கடன் பிரச்னை.இதனால் படத்தின் கழுத்தை நெரிக்க தயாராக இருப்பதால் கதாநாயகனும்,இயக்குநரும் ஒதுங்கி இருக்கிறார்கள்.
நாடோடிகள் 2 விதி எப்படி இருக்குமோ தெரியவில்லை.!