ஒவ்வொரு நடிகைக்கும் ஆசை இருக்கும்!
சிலர் பிள்ளை பெத்துக்கனும்னு ஆசைப்படுவார்கள்.பலர் குடும்பம் குட்டியோடு ஒதுங்கி இல்லற வாழ்க்கையை அனுபவிக்கனும்னு ஆசைப்படுவார்கள். வெளிநாட்டுப் புருஷனா இருக்கணும்,கொழுத்த பணக்காரனா இருக்கணும்.வயசு கூடுதலா இருந்தாலும் பரவாயில்ல பத்து வயசு குறைஞ்சாலும் கவலை இல்லை ,அப்படியே நாடு நாடா சுத்தணும்னு ஆசைப் படுவாங்க.!
ஆனா கத்ரினா கைப் ஆசை என்ன தெரியுமா?
சிரிக்காதீங்க பாஸ்! புரொட்யூசராக மாறனுமாம்!
“தயாரிப்பாளரா ஆகணும் அதான் ஆசை!” என்கிறவரிடம்
“ரிஸ்க் ஆச்சே மேடம்?”என்றால்,
“எதில்தான் ரிஸ்க் இல்லை.படங்கள் எடுக்கணும். தயாரிப்பாளர்ங்கிற பெயர் வாங்கனும். தீபிகா படுகோனே,அனுஷ்காசர்மா,பூஜாபட்,தியா மிர்சா இவங்கல்லாம் தயாரிப்பாளரா படங்கள் எடுக்கிறபோது என்னால் மட்டும் ஆக முடியாதா என்ன?” என்று கேட்கிறார்.
அழகான பொண்ணு. கட்டான உடம்பு. நடிகையாக நிறைய சேவை செய்யலாமே கத்ரினா?