யாரும் நபீலா அகமதுவை படம் எடுக்ககூடாது என கடுமையான கட்டுப்பாடுடன்தான் குறளரசன் -நபீலா அகமது காதல் திருமணம் மணமகளின் இல்லத்தில் நடந்தது.இதற்காகவே குறளரசன் இஸ்லாம் தழுவினார்.
குறிப்பிட்ட நண்பர்கள்,உறவுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த எளிமையான திருமணத்தில் மதச்சடங்குகளில் மணமக்களின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.நெருங்கிய உறவுகள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மணமகள் வீட்டார் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் போட்டோ எடுக்கப்பட்டது.அதை மணமக்கள் வீட்டாரே வெளியிட்டனர். அந்த படங்களில் இதுவும் ஒன்று.