“சுவையான கதையொன்று சொல்லுங்கள் அத்தான்!” என்று ராஜசுலோசனா கேட்க “சுவைக்காது கண்ணே” என சிம்மக்குரலில் சிவாஜிகணேசன் மறுத்து போர்க்கள கதையொன்று சொன்ன காலம் பறந்தே போச்சு. இப்ப வர்மா எப்படி ஆதித்ய வர்மாவாக மாறினார்னு கேளுங்க ..வம்பு,தும்பு கலந்து புதிய போர்க்கள கதை சொல்லுவார்கள்.
“எப்பேர்ப்பட்ட டைரக்டர்யா பாலா..அவர் டைரக்சன்லயா குத்தம் கண்டு பிடிச்சாங்க?”என்று ஒட்டு மொத்த பாலாவின் அபிமானிகள் அதிர்ச்சியாகி நிற்க “ஆமாய்யா ஆமா ..தப்புத்தப்பா படம் புடிச்சி வச்சிருக்காங்க.அதனால அத அப்படியே தூக்கிவச்சிட்டு புதுசா படம் எடுக்கிறோம்”என்று வர்மாவை பரணில் தூக்கிப் போட்டுட்டு ஆதித்ய வர்மாவை களத்தில் இறக்கி இருக்கிறார்கள். அர்ஜுன் ரெட்டியை இயக்கியவர்களில் துணை இயக்குநராக இருந்தவர் கிரீ.இவர்தான் இயக்கி இருக்கிறார்.
துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சாந்து. கொஞ்ச வயசு. சூடான ரத்தம்.கவர்ச்சிக்கும் ஓகே.இரண்டு பேருமே காலேஜ் பசங்கமாதிரிதான் இருக்காங்க.
“அது சரி …படப்பிடிப்பு நடக்கலியாமே?”
“எங்க படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிது யாரோ கிளப்பி விட்ட நியூசை எல்லாம் நம்பாதீங்க.படம் சூப்பரா வந்திருக்கு” என்கிறார்கள் தயாரிப்பு சைடில்!