தமிழ்த்திரையுலகில் சென்ற வருடம் போலவே 2014-ம் ஆண்டும் கவிஞர் நா. முத்துக்குமாரின் ஆதிக்கம்தான் . இந்த ஆண்டும் அவர் 35 படங்களில் 107 பாடல்கள் எழுதி முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து 11வது ஆண்டாக அவர் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ன.முத்துகுமார் கூறியதாவது,தமிழக ரசிகர்களின் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள், அதிகப் பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. 2014 ம் ஆண்டு நான், 35 படங்களில் 107 பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன். இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், என அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்கிறார்..இப்போது அவர் தாரை தப்பட்டை, டூரிங் டாக்கீஸ் உள்பட 101 படங்களில் பாடல்கள் எழுதி வருவது குறி ப்பிடத்தக்கது..