ஸ்ருதிஹாசன் லாபம் படத்தின் முதல் செட்யூலை முடித்து விட்டார். ராஜபாளையம் மற்றும் தென்காசி பக்கமாக இயக்குநர் ஜனநாதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். வெயில் கொளுத்தினாலும் மாலை நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்காற்று இதமாக இருக்கும். பச்சையப்பா என்கிற விவசாயிதான் ஸ்ருதியின் தோழர். முதியவர் கிராமிய வாழ்வியலை ஸ்ருதிக்கு சொல்லியிருக்கிறார்.இந்த படத்தின் நாயகர் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
இதற்கிடையில் தனது இரண்டு பேபிகளை மிகவும் மிஸ் பண்ணுவதாக ஸ்ருதி ரொம்பவும் பீலாகி இருக்கிறார்.
இப்படியெல்லாம் பதிவு போட்டால் நாம் ஆர்வமாகி விடுவோம் என்பதெல்லாம் அந்தக் காலம்.
நமது ஆபீஸ் பையனே “சார் நாக்குட்டியாக இருக்கும் இல்லேன்னா பூனக்குட்டியா இருக்கும் சார்” என்கிறான். அவன் அவதானித்தது சரிதான் கிளாரா,கோரா என இரு பூனைக்குட்டிகள்.!