தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்கள்.
சங்கத்தில் முறைகேடு,கணக்கு சரியில்லை.ஊழல் நடந்திருக்கு என சொல்லி அந்த அந்த மனுவை கொடுத்தார்கள்.
எடப்பாடிக்கு விஷால் மீது முன்னரே கோபம் இருந்தது . ஆர்.கே.நகரில் போட்டி,,அரசின் மீது அடிக்கடி குற்றச்சாட்டு என விஷால் நடவடிக்கை இருந்தது. அரசுக்கு விஷால் மீது நடவடிக்கை எடுக்க அந்த மனு வசதியாகி விட்டது.
ஒரு நல்ல நாள் பார்த்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து தனி அதிகாரியை பொறுப்பாளராக அரசு அறிவித்து விட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஷால் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்.
“தனி அதிகாரி நியமனம் தவறு,அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழக அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறானது”என விஷால் கூறி இருக்கிறார்.