மூடர்கூடம்இயக்குனர் நவீன்,தயாரிப்பாளர் சுவர்ணாசேதுராமன் இருவரும் பரஸ்பரம் ஒருவர்மீது ஒருவர் ‘பணமோசடி’ செய்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில்தயாரிப்பாளர் சொர்ணாசேதுராமன் கூறியுள்ள குற்றச்சாட்டை பாப்போம்,
” எனது Flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “ மூடர்கூடம் “ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம்ரூ. 45லட்சம் செக்காகவும், ரூ.5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம் போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார்.
நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக கோர்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்டில் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட திட்டமிடுகிறார். ஏற்கனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன் பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.
நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார் இவ்வாறு சுவர்ணாசேதுராமன் கூறியுள்ளார்.
அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான்
அதை திருப்பி தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films
நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
2016ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு வாசுதேவன்
ராமமூர்த்தியை அழைத்து நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா என்று கேட்டார்.
அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவணத்தின் வாரீசான விசாகனை ஹீரோவாக வைத்து படம்
எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று கூறி னார்.
முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்து அவர்கள்
கொடுத்த 5 வட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான்
அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு எனக்கு இந்த படம்
வேண்டாம் என்று கூறினேன். ராகுலன் என்னிடம், நீங்கள் இந்த படத்தை செய்தே ஆக
வேண்டும், உங்களுக்கு எல்லா விதமான சுதந்திரமும் இங்கு கிடைக்கும், உங்கள் கிரியேட்டிவ்
எல்லைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்று சொல்லி என்னை கன்வின்ஸ் செய்தார். மேலும்
ஒரு First Copy Agreement தயார் செய்து கையெழுத்திடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் காப்பி
ஒப்பந்தம், Flash Films நிறுவணத்திற்கும் என்னுடைய White Shadows Productions
நிறுவனத்திற்கும் இடையில் போடப்பட்டது.
இதற்கு இடையில் நான் Pre-Production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னுடைய
டெக்னீஷன்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தேன். இஸ்தான்புல் லைன்புரடீயுசர் பசாக்
என்கிற துருக்கி பெண்ணிடம் லொக்கேஷன் பார்ப்பதற்கும் வீசாவிற்கும் பணம் கொடுத்தேன்.
என் கேமராமேனுடன் சேர்ந்து அமெரிக்காவில் லொக்கேஷன் தேடினேன். படப்பிடிப்பிற்கான
எல்லா வேலைகளையும் சேர்த்தே செய்ததால் அவர்கள் எனக்கு pre-production பணிகளுக்காக
கொடுத்த 44.5 லட்சம் ருபாய் பத்தாமல் போனது.
ஜனவரி 2017 நான் அவர்களிடம் படப்பிடிப்பிற்கு செல்லலாம், காலம் தாமதம் ஆகும்போது
செலவுகள் அதிகம் ஆகும், அதனால் உடனே படப்பிடிப்பிற்கு சென்று படத்தை முடிக்க வேண்டும்என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் சம்மந்தம் இல்லாத பல கரணங்கள் சொல்லிகொஞ்சம் கொஞ்சமாக தாமதம் செய்துகொண்டே இருந்தனர். 8 மாதங்கள் இப்படியே ஓடியிருக்கமார்ச் மாதம் ராகுலன் என்னையும் என் மேனேஜர் வாசுவையும் அழைத்து தாமதத்திற்கானகாரணத்தை சொன்னார்.
தங்கள் குடும்பத்தில் ஒரு துர்சம்பவம் நடந்துள்ளதாகவும் அதனால்
அனைவரும் உடைந்து போயிருப்பதாகவும் சொன்னார். நானும் நிலமையை புரிந்துகொண்டு,
இன்னும் ஒரு மாதம் தாமதமானாலும் பரவாயில்லை, பொருமையாகவே படப்பிடிப்பிற்கு
செல்லலாம் என்று கூறினேன்.
அதற்கு ஒரு வாரத்திற்கு பின் சுவர்ணா சேதுராமன் எங்களை அவருடைய அலுவலகத்திற்கு
அழைத்தார். விசாகன் அமேரிக்கா செல்கிறான், இனி இந்த படம் நடக்காது, நீங்கள் வாங்கிய pre-production பணத்தில் 20 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். நான் படத்தைதொடராவிட்டால் எனக்கு நஷ்டமாகும் என்று கூறினேன். படப்பிடிப்பிற்கான வேலைகளுக்காகபணம் செலவு செய்திருப்பதால் படப்பிடிப்பு தொடராமல் போனால் அந்த செலவுகள் வீணாகபோகும் என்றேன்.
இந்த படம் கைவிடப்பட்டால் என்னுடைய 8 மாத உழைப்பு வீணாகும்,
அதற்கு என்ன இழப்பீடு என்றும் கேட்டேன். மேலும் இந்த படத்திற்காக எனக்கு வந்த மூன்று
பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்திருந்தேன். அதற்கு சுவர்ணா சேதுராமன் அவர்கள் என்னைமிரட்டும் தொனியில் பேசினார்.
அவர் என்னை மிரட்டியதற்கு ராகுலன் மற்றும் வாசுதேன்
ராமமூர்த்தி இருவருமே சாட்சி. அவர் மிரட்ட ஆரமித்ததால் நான் ‘படம் செய்து தர நான்
எப்பொழும் தயார், படப்பிடிப்பிற்கான பட்ஜெட்டை கொடுத்தால் நான் படம் செய்து தருகிறேன்’என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அதற்கு பிறகு மூன்று மாதங்கள்காத்திருந்தேன். அவர் படபிடிப்பு தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக தயாரிப்பாளர் சங்கத்தில், நான் ஸ்கிரிப்டு எழுதவில்லை அதனால் இந்த படத்தை ட்ராப்செய்ததாகவும், நான் அட்வான்ஸ் திருப்பி தரவில்லை என்றும் என் மீது பொய் புகார் கொடுத்தார்.பொய்வழக்கு போட்டு என்னுடைய‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ரிலீசுக்கு தடை வாங்கியுள்ளார்.
எனக்கு எந்தவிதமான நோட்டிபிகேஷனும் கொடுக்காமல் தன் பணபலத்தை உபயோகித்து தடைவாங்கியுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படம் எனது முந்தைய படங்களை போலவேஎனது நண்பர்கள் பணம் மற்றும் ஒரு பெரிய பைனான்சியரிடம் பைனான்ஸ் வாங்கிஎடுக்கப்பட்ட படம்.
இந்த படத்திற்கும் சுவர்ணா சேதுராமன் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும்
இல்லை. மிகுந்த பொருட்செலவில் முழுதும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த
திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானால் எனக்கும் பணம் போட்ட என் நண்பர்களுக்கும் பெருத்தநஷ்டம் ஏற்படும்.
நான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை, படத்தின் pre-production
பணிகளுக்கான பணம். அவர் சொல்வதுபோல் நான் அவரிடன் படம் செய்ய காசு கேட்கவில்லை.
என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-
production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், செக்னீஷன்களுக்கு கொடுத்த
அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது. என் தரப்பில் முறையான
ஆதாரங்கள் உள்ளன.
என் தரப்பு ஆதரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில்
இருக்கும் விசாகனையும் அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது
உண்மை என்றும், சுவர்ணா சேதுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள்.
அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும்
இருக்கிறது.
நான் என் தரப்பில் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன். சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் ஸ்கிரிப்ட்எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல்ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூரு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர்சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்.இவ்வாறு நவீன் கூறியுள்ளார்.