அன்பு சகோதரர் திரு.டி.ராஜேந்தருக்கு,
தொடக்க காலத்தில் டி.ராஜேந்தருக்கு துணையாக நின்றவர்கள் பத்திரிகையாளர்கள்தான்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் டி ராஜேந்தரின் திருமணத்துக்கு பக்க பலமாக நின்றார்கள். எத்தகைய சூழலில் திருமணம் நடந்தது என்பதை அவர் மறந்திருக்கலாம்.ஆனால் பத்திரிகையாளர்கள் மறக்கவில்லை.உறுதுணையாக நின்றவர்களில் தினமலர் மாரிமுத்து இன்று இல்லை என்றாலும் எஞ்சியவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.
முதன் முதலாக டி.ஆர். வீட்டுக்கல்யாணம்.. ஆண் வாரிசு.
எங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? அந்த வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் விளையாட்டு மோட்டார் வண்டியில் சிம்பு விளையாடுவதை பார்த்தவர்கள்.சின்ன பிள்ளைகளில் இருந்தே அந்த பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்பட்டவர்கள்.
அந்த மகிழ்ச்சியை எல்லாம் மறந்து விட்டாரே டி ஆர்!
37 நாட்களில் 13 கிலோ எடை குறைந்து முன்னிலும் இளமையாக திரும்பி இருக்கிற சிலம்பரசனாவது சொல்லி இருக்க வேண்டாமா, பத்திரிகையாளர்களையும் அழையுங்கள் என! சொந்த சகோதரி வீட்டுக்கே அழைப்பு இல்லை என்கிறபோது உங்களை அழைக்கவேண்டும் என்பது என்ன சட்டமா என சிலர் கேட்டார்கள். நல்லது.
சிம்புவுடன் வாதம் பண்ணுகிற அவரது நண்பர் கஜேந்திரனாவது சொல்லி இருக்க வேண்டாமா?
மணமக்கள் நன்றாக இருக்கட்டும்.
திருமணம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசுவது வெறும் பம்மாத்து வேலை.
நன்றி டி.ஆர்.!
அன்புடன் ,
தேவிமணி