மதுரையில் கன்னா பின்னாவென வதந்திகள் கழுதையாக மேய்ந்து கொண்டிருந்தது.
“என்னடா இது..சாலிகிராமமே சந்தோஷத்தில் இருக்கு. மதுரைக்காரய்ங்க கொளுத்திவிட்டுக்கிட்டிருக்காங்களே ” என நொந்தபடியே கேப்டன் வீட்டுப்பக்கமாகப் போனால் மனிதர் ரெஸ்ட்டில் இருந்தார்.
“நல்லாருக்கீங்களா கேப்டன்!”
கேப்டன் வீட்டில் யாரும் சந்தேகப்படக்கூடாதுல்ல. அதான் இப்படி ஒரு கேள்வி .
ஆனால் அடுத்துக் கேப்டன் கேட்டதுதான் ஆச்சரியம்.
“எந்தப்படம் நல்லாருக்கு.!”தெளிவற்ற குரல் .ஆனால் புரிகிறது. தொடர்ந்து “காஞ்சனா எப்படி இருக்கு?”என்று கேட்கிறார். பேச்சு சுலோவாக வருகிறது.நல்ல மாற்றம்தான்!
அவருக்கு இன்றைய சினிமா நிலவரம் யாரோ சொல்லி தெரிந்திருக்கிறது.
“படம் சுமார்.வசூல் சூப்பர்!” என்றதும் சிரிப்பு.!
தொடர்ந்து தொல்லை தர விருப்பம் இல்லை.