‘பூமராங்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
முழு நீள நகைச்சுவை ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது.
‘கண்டேன் காதலை’ படத்தில் இடம் பெற்ற சந்தானத்தின் கேரக்டரான மொக்கராசுவை இதில் முழுநீள கலக்கல் காமெடி நாயகனாக்கியுள்ளாராம் இயக்குனர் கண்ணன்.
படம் முழுவதும் (இரண்டரைமணிநேரமும்) மொக்கராசுவின் காமெடி அலப்பறையை பார்த்து ரசிகர்கள் கைதட்டி ரசித்து மகிழலாம்.
சந்தானத்தின் காமடிக்கென தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இந்த மனிதர் கேப் விட்டதால் கிடைத்த இடைவெளியில் யார் யாரோ வந்து விட்டார்கள்.
நல்லவேளை இப்போதாவது மனிதர் விழித்துக் கொண்டாரே! இயக்குநர் கண்ணனின் கைவரிசையில் மீண்டும் காமடி ராஜ்யத்தைக் கைப்பற்ற நல்ல வாய்ப்பு.
“இந்த கதையை சந்தானத்திடம் சொன்னபோது மனிதர் குலுங்கிக்குலுங்கி சிரித்து அவர் கண்களில்கண்ணீரே வந்து விட்டது. . வரும் டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”என்ற கண்ணன் மேலும் சொன்னதாவது:
“முன்னணி கதாநாயகி மற்றும் நடிகர்,நடிகையர் இதில் நடிக்கின்றனர்.இதன் விபரங்களை விரைவில் படத்தின் தலைப்புடன் அறிவிக்க இருக்கிறோம்.
இப்படத்தை எனது மசாலா பிக்ஸ் நிறுவனம் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது “என்றார் இயக்குநர் கண்ணன்.