அண்மையில் தேசிய அளவில் கராத்தே கலையில் தண்டர் கிக் அதாவது இடி மாதிரி அடி கொடுப்பது..அந்த கலையில் சூர்யாவின் மகன் தேவ் முதல் பரிசு வாங்கி இருக்கிறார்.
இந்தியாவின் தலைநகர் டில்லியில்தான் பரிசு வழங்கும் விழா நடந்தது.
அன்று காலை சென்னையில் தி.நகரில் லட்சுமி இல்லத்தில்…
காலையில் சாமி கும்பிடாமல் தேவ் வெளியில் கிளம்புவதில்லை.வழக்கம்போல சாமியை வணங்கி விட்டு தாத்தா சிவகுமாரை தேடிச்சென்றான்.
“என்னப்பா” பாசமுடன் கேட்கிறார் தாத்தா.
காரணம் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் “எனக்கு ஆசி வழங்குங்கள்”என்று மட்டுமே சொல்லிவிட்டு சாஸ்டாங்கமாக காலில் விழுந்து வணங்குகிறான்.
“நீ எனக்கு எங்க அப்பாய்யா,,!என் காலிலா விழுறே” என உணர்ச்சி வயமாகி விட்டார் தாத்தா சிவகுமார். எல்லாம் நொடிகளில் நடந்து முடிகிறது.
டில்லியில் நடந்த போட்டியில் தேவ் வென்றாகிவிட்டது.
சென்னை திரும்பியதும் தாத்தாவையும் பாட்டியையும் ஒன்றாக நிறுத்தி அவர்களின் காலில் விழுந்து வணங்குகிறது அந்த தண்டர் கிக்.!
இதை பக்தி என்று சொன்னாலும் சரி ,மரியாதை என்று சொன்னாலும் சரி…அது மிகவும் உயர்ந்த பண்பு! சிவகுமார் குடும்பத்துக்கே உரியது.