கவியரசன் கண்ணதாசனை விட்டால் வேறெவரை இங்கு அழைக்க முடியும்?
நளவெண்பா…நான்கு வரி வெண்பாவுக்கு பாட்டுக்கரசன் பதினாறு வரிகளில் விளக்கம் சொல்கிறான்.
கண்ணதாசன் பாடியது என்ன?
“தேர்வேந்தன் நளனோடும் காதல் மாது
இழைபோலும் தமயந்தி அணையின் மீது
போர் செய்த கலையழகை உணர்ச்சியோடு
புகழேந்தி சொல்கிறான் :மங்கை அங்கோர்
ஏர்பூட்டி உழுதாளாம்:எவ்வாறென்றால்
இருகொங்க ஏராக,மாதின் மேனி
ஏர் சேர்ந்த நுகமாக ,வியர்வை நீரே
எழில் நீராய்ப் பாய்ந்தோடக் காதலுக்கு
வரப்பெடுத்தே உழுதாளாம்!காமமென்னும்
வளமான பயிர்வளர்த்து மகிழ்வுற்றாளாம்!
பரிப்படையும்,கரிப்படையும் பெற்ற மன்னன்,
பாவையினால் உழப்பட்டான்.தானும் அந்தச்
சிறப்புடைய உழவுக்குச் சிரங் குனிந்தான்
சில்லென்று பூரித்தான்!மெய்ம்மறந்தான்!
வரப்பெடுத்த காமத்தை வரம்பு மீறி
வழங்குகிறான் என்றாலும் மணக்கும் வெண்பா”
இந்தப் பாடலுக்கும் மேலே உள்ள அக்சரா கவுடா படத்துக்கும் சம்பந்தம் இல்லை.
அவர் துப்பாக்கி ,போகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
நாகார்ஜுனாவின் மன்மதுடு 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.நாகார்ஜுனாவின் கனவுக்கன்னியாக!