தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இரண்டுக்குமே தேர்தல் காலம்.
தயாரிப்பாளர் சங்கத்தை சர்க்காரே கை வசப்படுத்தி இருக்கிறது. இதில் அரசியல் இருக்கிறது .விஷாலுக்கு எதிரான அணியுடன் எடப்பாடி அரசு கூட்டணி வைத்து கோவிந்தா போட்டு விட்டது என்கிறார்கள்.
ஆனால் நடிகர் சங்கம் அப்படியல்ல. நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் தானாகவே அடுத்த நிர்வாகம் வருவதற்காக வாசலை திறந்திருக்கிறது. அங்கே தான் விஷால் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்.செயலாளர் பதவிக்கு நிற்பார் என்கிறார்கள். எல்லாம் உறுதி செய்யப்படாத செய்திகள் என்றாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை.
இதனால் விஷாலுக்கு எதிராக இயங்குகிறவர்கள் அவரை எதிர்ப்பதற்கு முன்னர் தயார் செய்திருந்தது ஜே.கே.ரித்தீஷை.
ஆனால் எதிர்பாராத மரணம் வேறு ஒருவரை தேடச்செய்தது.
ஐசரி கணேஷ்.பொதுவான வேட்பாளராக நிறுத்தப்படலாம் என சொல்கிறார்கள். இவர் நடிகர் சங்கத்துக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.நலிந்த நடிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்..இதனால் இவரே நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.
ஐசரி நிறுத்தப்பட்டால் விஷால் நிற்கமாட்டார் என்பது நம்பிக்கை.