ஹைதராபாத்துக்கு வெளியில்.!
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பார்ம் ஹவுஸ் இருக்கிறது. நிறைய வீடுகள் நிறைந்த பகுதி.கண்டிபெட் லேக் ஏரியா அருகில்.!
தனது பார்ம் ஹவுசில் ‘சியேரா நரசிம்ம ரெட்டி ‘என்கிற சரித்திரப்படத்துக்காக செட்டுக போட்டிருந்தார். ஹிஸ்டாரிகல் படம் எடுப்பதால் செட்டுகள் ரிச்சாக இருந்தன இந்த செட்டில்தான் தீ விபத்து. இந்த படத்தில்தான் மக்கள் செல்வன் விஜயசேதுபதியும் நடிக்கிறார்.
புகைவருவதை பார்த்த போலீஸ்காரர் அலர்ட் செய்தும் முழுமையாக தடுக்க முடியவில்லை. காற்றின் வேகம்,வெயிலின் கோரம் எல்லாம் சேர்ந்து எரிந்து நாசமாக்கி விட்டது. கோடிகள் நட்டம் என்கிறார்கள்.
சென்னையில் தளபதியின் படப்பிடிப்புத் தளம் தீயில் நாசம் என்றால் ஆந்திராவில் மெகா ஸ்டாரின் படப்பிடிப்புத் தளத்திலும் அக்கினி பகவான் ஆட்டம் போட்டிருக்கிறார்.