ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னை ரஷ்யன் கல்சர் சென்டரில் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,தீபாராதனைக்கு பின்னர் படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு,இயக்குனர் ரஞ்சித் ஆகியோருக்கு இனிப்பு ஊட்டினார். கபாலி படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் சென்னையில் நடக்கிறது.படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லிங்கா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது, ‘கபாலி’ என்ற புதிய படத்தில் மலேசிய தாதாவாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடிக்கிறார். இப்படத்தை ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். பட அதிபர் கலைப்புலி . எஸ்.தாணு இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.‘கபாலி’ படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தியான இன்று காலை 9.05 மணிக்கு சென்னையில் போயஸ்கார்டன் அருகே பூஜையுடன் தொடங்கியது.. தீபாராதனை காட்டி,சாமி கும்பிட்ட ரஜினி,படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு,இயக்குனர் ரஞ்சித் ஆகியோருக்கு இனிப்பு ஊட்டினார். அதைத்தொடந்து இயக்குனர் ரஞ்சித் ஸ்டார்ட்,ரெடி ஆக்சன் என்று சொன்னதும் ரஜினிகாந்த் வெள்ளை தாடியுடன்,பெப்பர் சால்ட் விக் அணிந்து புளு கலர் சர்ட் , நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் நடந்து வரும் முதல் காட்சி படமாக்கப்பட்டது.அனைவரும் கைதட்டி ரஜினியை பாராட்டினர்.ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அது பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஸ்டூடியோக்களிலும், புறநகர் பகுதிகளில் உள்ள தோட்டங்களிலும் கலை இயக்குனர்களை வைத்து பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த அரங்குகளில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படபிடிப்பில்,முதல் ஒருவாரம் ரஜினிகாந்த் மட்டும் நடிக்கும் அதிரடி சண்டை மற்றும் வசன காட்சிகளை படமாக்குகின்றனர். அதன்பிறகு ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதையடுத்து , மலேசியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு ஒருமாதம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக வும், மயிலாப்பூரில் அவர் வசிப்பதுபோன்றும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு ஏமாற்றப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதை கேள்விப்பட்டு, அவர்களை காப்பாற்ற மலேசியாவுக்கு போய் அங்குள்ள வில்லன்களை துவம்சம் செய்வது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் படக்குழுவினர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.முன்னதாக ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் அது படபிடிப்புக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி விடும் என்பதால் படப்பிடிப்பு நடக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது ,ஆனால் அதையும் மீறி இன்று காலை ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.