பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் மைசூர் சென்றார்.
இந்நிலையில் அங்குதிடீரென குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு இடுப்பில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவருக்கு சின்னதாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும், மைசூரில் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு சென்னை திரும்புவார் என்கிறார்கள்.எஸ்.ஜானகி ஏற்கனவே 2012-ல் திருப்பதியில் நடந்த அன்னமாச்சாரியா கீர்த்தனை விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது,அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள குளியலறையில் கால் தவறி கீழே விழுந்து,அவரது தலையில் பலத்த அடிபட்டு அவரது தலையில் 7 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












