சிக்கலின் ஆரம்பம் என்பது முதலில் தெரிவதில்லை. போகப் போகத்தான் இலகுவாகி கனம் குறைகிறபோதுதான் “ஆகா..இங்கல்லவா தப்பு நடந்திருக்கு “என்பது புரிய வரும்
அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷாலின் விவாக ரத்து நிலையும்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் இயக்குநர் நட்ராஜ்.தன்னுடைய மகளுக்கு ரஜினி என பெயரிட்டு வளர்த்தார்.
இந்த பெண்ணுக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என தெரிந்ததும் இரு வீட்டாரின் சம்மதமுடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
குடும்ப வாழ்க்கை நன்றாகப் போகிறது என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரென இருவரும் பரஸ்பர விவாக ரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள். காரணத்தை இருவருமே சொல்லவில்லை!
இந்த நிலையில்தான் விஷ்ணு விஷால் ஒரு ஆங்கில நாளேட்டிடம் மனம் திறந்திருக்கிறார்.
“நான் தனித்தே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனவன். வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவ்வளவாக பழகுவதில்லை.
ஆனால்….
இது எனது சினிமா வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது.என்பதை காலம் கடந்துதான் உணர்ந்தேன். இதனால் சகஜமாக பழக ஆரம்பித்தேன். குறிப்பாக பெண்களிடம்!
திரைப்படங்களில் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு கூச்சப்பட்டால் கதை முடிந்து விடும் .
ஒதுக்கி விடுவார்கள்.
அந்த காட்சியில் ஜீவனும் இருக்காது. இதனால் பெண்களிடமும் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.
அதுவே பிரச்னை ஆகும் என நினைக்கவில்லை.!
“நீ மாறிட்டே”என்கிற குரல் வந்த பிறகுதான் அதிர்ச்சியாகியது. புரிதல் இல்லாத இவரைத்தான் காதலித்து கல்யாணம் செய்தோமா…போச்சு! முடிந்து போச்சு.என்கிற நிலைக்கு வந்தேன்.
என் மகனுக்காக என் மனைவிக்காக அதாவது அவர்களது நலனுக்காக மணவிலக்குப் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்கிற நிலை.வந்தது.அவரை எனக்கு தெரியும்.என்னையும் அவருக்கு தெரியும்.
நாங்கள் ஒன்றாக இருப்பது இந்த உலகுக்குப் பிடிக்கல!” என்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.