

விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது,
‘ரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொம்ப நன்றி.
எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.
தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசினார்.