மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் நடித்த கடைசி படம் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் பாலசந்தர் ஏற்று நடித்த வேடம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து இப்படத்தை இயக்கி வரும் ரமேஷ் அரவிந்த் தனது பேஸ்புக்கில் , ‘இந்த படத்தில் மனோரஞ்சன் என்ற நடிகராக கமல்ஹாசனும், மார்கதர்ஷ் என்ற இயக்குனராக பாலசந்தரும் நடித்துள்ளனர்.. இந்த படத்தில் இயக்குனர் பாலசந்தரின் முதல் அறிமுக காட்சி மிகவும் வித்தியாசமாக இருக்கும்.கமல்ஹாசன் மற்றும் பாலசந்தர் ஆகியோர் இணைந்த நடித்த சில அபூர்வ காட்சிகள் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் வகையில் இருக்கும் என்பது மட்டும் உண்மை’ என்று கூறியுள்ளார். மேலும் உத்தம வில்லன் திரைப்படம் பாலசந்தர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அமையும்என்றும் , பாலசந்தர் இப் படம் குறித்து வாழ்த்து கூறிய ஆடியோ பதிவு படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.தற்போது அமெரிக்காவில் இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் இந்தியா திரும்பியவுடன் பாடல் வெளியீட்டு விழா தேதி மற்றும் பட வெளியீட்டு தேதி தேதி முடிவு செய்யப்படும் என்கிறது படக்குழு.