சென்னை கோடம்பாக்கத்தை தற்போது உலுக்குவது திரைத்துறை அமைப்புகளுக்கான தேர்தல்தான்.!
நடிகர் சங்கத்திற்கும் சரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பளர்கள் சங்கத்துக்கும் சரி நடிகர் விஷால் வரக்கூடாது என ஒரு குழுவினர் முண்டாசு கட்டிக்கொண்டு முழு வீச்சில் இப்பவே இறங்கி இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலுக்குப் பதிலாக வேல்ஸ் யுனிவர்சிட்டி வேந்தர் ஐசரி கணேஷை நிறுத்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா முயற்சிகள் செய்தார்.
ஆனால் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என தெரிந்தது.
கடேசி நேரத்தில் யாராவது நின்று விட்டால் என்ன செய்வது என யோசிக்கிறார்களாம்.
ஆக தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் என்ற இந்த அமைப்புகளில் போட்டியிட ஐசரி மிகவும் தயங்குவதாகவே தெரிகிறது.