சாய் பல்லவி செந்தாமரை. கோத்தகிரிப் பொண்ணு. டாக்டருக்குப் படித்தவர்.
ஆனாலும் அவரை நடிகையாகப்- பார்க்கிறார்களே தவிர யாரும் டாக்டராக பார்ப்பது இல்லை. அந்தளவுக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் என முக்கிய திராவிட மொழிகளில் இவரது திரை உலக சாம்ராஜ்யம் விரிந்திருக்கிறது. விரைவில் வரவிருக்கும் என்.ஜி.கே.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சிரித்தால் கன்னம் இரண்டும் ரோஜாவைப் போல சிவந்து விடுகிற ஒரே நடிகை சாய் பல்லவிதான்.!
இவரின் பெரும் கவலையே படித்த படிப்பு பிறர்க்கு உதவாமல் போய்விடுமே என்பதுதான்!
என்ன சொல்கிறார் தெரியுமா?
“நான் பிராக்டீஸ் செய்ய ஆஸ்பிட்டலுக்கு சென்றது இல்லை.
படித்ததெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பது அவசியம்.எனக்கு இருந்த திறமைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எனை விட்டுப் போவதைப் போல இருக்கிறது..
நாம் எதைப்படித்தோமோ ,நன்றாக செய்தோமோ அது நினைவில் இல்லாமல் போனால் கண்டிப்பாக உடைந்து போய்விடுவோம்.அதுதான் பயமாக இருக்கிறது.
தற்போது நான் ஆஸ்பிடல் சென்றால் எல்லோரும் என்னோடு போட்டோக்கள் எடுத்துக் கொள்வார்களே தவிர நான் கொடுக்கும் பிரிஷ்கிருப்ஷனை நம்பப்போவதில்லை.
வீட்டில் இருக்கும் ஒரே டாக்டர் நாந்தான்!”என்கிறார் சாய் பல்லவி.
இதுதான் உண்மையான வேதனை. படித்த படிப்பு பயன் தராமல் வீணாகப்போகிற வேதனை பட்டவர்களுக்குத்தான் தெரியும்.!