லைகா குட்பை செல்லிவிட்டது மணிரத்னம் இயக்கும் படமான பொன்னியின் செல்வனுக்கு.!
அடுத்த கதவு ரிலையன்ஸ்.
உள்ளே போன மணிக்கு என்ன பதில் கிடைத்ததோ மனிதர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தற்போது அமலாபாலை ஒப்பந்தம் செய்யப் போகிறாராம். குந்தவை,வானமாதேவி ,ஆகிய முக்கிய கேரக்டர்களுக்கு நட்சத்திரங்களை பேசியாகி விட்டது என்கிறார்கள்.
அப்படியானால் அமலா பாலுக்கு என்ன வேடமாக இருக்கும்?கரிகால் சோழனாக சீயான் விக்ரம்,வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார்கள்.
வருசக்கடைசியில்தான் ஏஆர்ரகுமான் இசையை ஆரம்பிப்பார் என்பார்கள்.
எதாக இருந்தால் என்ன கடைசி அறிக்கை மணிரத்னம் தருவதுதான் இறுதி.!